சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் கம்பீரமாக பறந்தது தேசியக்கொடி..!

Estimated read time 1 min read

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் கிழக்கு ராஜகோபுரத்தில், பொது தீட்சிதர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா, குடியரசுத் தின விழா நாளில், உலக பிரசித்திப் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலின் கீழ வீதி கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம்.

பொதுதீட்சிதர்கள் மேளதாளத்துடன் கோயில் பிரகாரத்தில் வலம் வந்து பிரதான வாயிலான கிழக்கு கோபுரத்தின் 142 அடி உயர உச்சியில் தேசிய கொடியை ஏற்றினர். குறிப்பாக, கோயில் கோபுரத்தில் 151 வது முறையாக தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், தேசியக்கொடி கோபுரத்தில் ஏற்றப்பட்டவுடன் பக்தர்களுக்கு நடராஜர் கோவில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

You May Also Like

More From Author