ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள் எனும் நிகழ்ச்சி வியட்நாமில் ஒளிபரப்பு

 

சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங்கின் வியட்நாம் பயணத்தை முன்னிட்டு, ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள் எனும் நிகழ்ச்சி (வியட்நாம் மொழியில்) ஏப்ரல் 14ஆம் நாள் அந்நாட்டில் ஒளிபரப்ப தொடங்கியது.

அதே நாள், சீன ஊடகக் குழுமம் வியட்நாம் தொலைக்காட்சி நிலையம் இடையே ஒத்துழைப்புக்கான விழாவும், இரு நாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கான மானுடவியல் பரிமாற்றம் நடவடிக்கையும் ஹனோயில் நடைபெற்றன.

இதற்கு, வியட்நாம் தலைமையமைச்சர் ஃபம் மிந் சின் வாழ்த்துச் செய்தி அனுப்பினார். அரசியல், பொருளாதாரம், பண்பாடு, ஊடகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்நடவடிக்கையில் உரைநிகழ்த்திய சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநர் ஷென் ஹைசியுங், ஷிச்சின்பிங்கிற்கு பிடித்த செவ்வியல் மேற்கோள்கள் எனும் நிகழ்ச்சியில், ஷச்சின்பிங் மேற்கோள் காட்டிய தலைசிறந்த சீனக் கதைகள் இடம்பெற்றன.

இதில், சிறந்த பாரம்பரிய சீனப் பண்பாடுகளில் புதிய சகாப்தத்தின் அர்த்தத்தையும் உலகளாவிய மதிப்பையும் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author