ஒருசார்புதடை என்ற கருவியைப் பயன்படுத்தி அச்சுறுத்தும் அமெரிக்கா

இஸ்ரேல் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைது ஆணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதம்,  தடை விதித்தல் என்ற கருவியை அமெரிக்கா மீண்டும் பயன்படுத்தியுள்ளது. இது, உலக அளவில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் சிஜிடிஎன் நடத்திய உலகளாவிய கருத்துக் கணிப்பில், அமெரிக்கா விதிக்கும் தடைகளுக்கு எவ்வித சட்ட அங்கீகாரமும் இல்லை என்று 90.1 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், சர்வதேச அமைப்புகள் மற்றும் ஒழுங்கமைவை அமெரிக்கா மதிப்பதில்லை என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.

பிற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் மீது அமெரிக்கா தடை விதிப்பதால் ஐநா மையக் கோட்பாடான பன்முக சர்வதேச ஒழுங்கமைவைச் சீர்குலைத்துள்ளது என்று 85.2 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எதிராக அமெரிக்கா தடை விதிப்பது இது முதன்முறை அல்ல. ஆப்கன் போரில் அமெரிக்காவின் நடத்தை குறித்த விசாரணையில் இந்நீதிமன்ற அதிகாரிகளின் பங்கேற்பைத் தொடர்ந்து, அதிகாரிகள் மீது 2020இல் தடை விதிக்கப் போவதாக முன்னாள் அரசுத் தலைவர் டிரம்ப் எச்சரித்தது நினைவுகூரத்தக்கது.

1950-களுக்குப் பிறகு, பிற நாடுகள் மீது தடை விதிப்பதில் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது, தற்போது வரை 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author