பொருளாதார மற்றும் வர்த்தக துறைகளில் ஆதிக்கத்தை செலுத்தும் அமெரிக்கா

சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஏப்ரல் 21ஆம் நாள் கூறுகையில், அண்மையில், சமம் என்ற பெயரில், அனைத்து வர்த்தக கூட்டாளிகளுக்கும் அமெரிக்கா கூடுதல் சுங்க வரியை விதித்துள்ளதோடு, “பரஸ்பர வரி விதிப்பு” பற்றிய பேச்சுவார்த்தைக்கும் பல்வேறு தரப்புகளை நிர்ப்பந்தித்துள்ளது. சமம் என்ற பெயரில் பொருளாதார மற்றும் வர்த்தக துறைகளில் அமெரிக்கா ஆதிக்கவெறி திணிப்பதை எடுத்துக்காட்டுகிறது என்றார்.

மேலும், பல்வேறு தரப்புகள் சமத்துவமான கலந்தாய்வு மேற்கொள்வதன் மூலம், பொருளதார மற்றும் வர்த்தகத் துறைகளில் அமெரிக்காவுடனான கருத்து வேற்றுமைகளைத் தீர்ப்பதற்கு சீனா மதிப்பளிக்கிறது.

அதோடு, எந்த ஒரு தரப்பும் சொந்த இலக்கை நனவாக்குவதற்காக சீனாவின் நலன்களைப் பலி கொடுப்பதை சீனா ஒருபோதும் அனுமதிக்காது. இது ஏற்பட்டால், சீனா உறுதியுடன் எதிர் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author