சீனாவில் அரசு சாரா தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 5.7 கோடி

Estimated read time 1 min read

 

சீனச் சந்தைக் கண்காணிப்புப் பணியகம் 21ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மார்ச் இறுதி வரை, சீனாவில் பதிவு செய்யப்பட்ட அரசு சாரா தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 5.7 கோடியைத் தாண்டியுள்ளது. இது தொழில் நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கையில் 92.3 விழுக்காடாகும்.

முதல் காலாண்டில், இணையம் மற்றும் நவீன தகவல் தொழில் நுட்பச் சேவைத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 18 விழுக்காடு அதிகரித்தது.

எண்ணியல் மாற்றம், பசுமையான கரி குறைந்த மாற்றம், உலகமயமாக்கல் ஏற்பாடு முதலியவற்றின் மூலம், அரசு சாரா தொழில் நிறுவனங்கள் மையப் போட்டியாற்றலை உயர்த்தி வருகின்றன. மேலும், பயணியர் விமானச் சேவை, குவாண்டம் தகவல்கள், இயந்திர மனிதர் முதலிய துறைகளில், அரசு சாரா தொழில் நிறுவனங்கள் செழுமையான உயிராற்றலைக் காட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author