ஆப்கானிஸ்தானுக்கான சீனத் தற்காலிக தூதர் பாவ் ஷுஹுய், செப்டம்பர் 2ஆம் நாள் ஆப்கானிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பொது விவகாரத் தலைவர் ஆலமுடன் சந்திப்பு நடத்தினார்.
அப்போது, ஆப்கானிஸ்தானுக்கான சீனத் தூதரகம், சீன முதலீட்டு நிறுவனங்கள், வெளிநாடுகள் வாழ் சீனர் சங்கம் ஆகியவை வழங்கிய நிவாரண நிதியுதவியை, பாவ் ஷுஹுய் ஆப்கானிஸ்தானுக்குக் கொடுத்தார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னல்களைச் சமாளிப்பதற்கு உதவியளிக்க விரும்புவதாக பாவ் ஷுஹுய் தெரிவித்தார்.
சீனாவின் உதவுக்கு ஆலம் நன்றி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதற்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கு உதவியளித்த முதலாவது நாடாக சீனா திகழ்கிறது. சீனா வழங்கிய நிதியுதவி மற்றும் பொருட்கள் நிவாரண பணி மற்றும் புனரமைப்புப் பணியில் பயன்படுத்தப்படும் என்றார்.