தென் சீனக் கடல் விவகாத்தில் அமெரிக்கப் பிரதிநிதி சீனா மீது ஆதாரமில்லாத குற்றஞ்சாட்டியுள்ளது குறித்து ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி ஃபுஸுங் 22ஆம் நாள் மறுத்து பதில் அளித்தார். பலதரப்புவாதம் மற்றும் அமைதி மூலம் தகராறுகளைத் தீர்த்து சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை முன்னேற்றுவது பற்றிய ஐ.நா பாதுகாப்பவையின் உயர் நிலை விவாதக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஃபுஸூங் மேலும் கூறுகையில், தென் சீனக் கடல் மற்றும் அதற்கு அருகிலுள்ள தீவுகள் மீது சர்ச்சையில்லாத இறையாண்மையைச் சீனா கொண்டுள்ளது. ஆனால், தென் சீனக் கடல் விவகாரத்தில் அமெரிக்கா வரலாறு மற்றும் உண்மையை மீறி பொய் தகவல்களைப் பரப்பி வருகிறது. பிராந்திய நாடுகளின் உறவுகளையும் பரஸ்பர நம்பிக்கையையும் சீர்குலைத்துள்ளது. அதுமட்டுமல்ல, தென் சீனக் கடல் பிரதேசத்தில் தரை அடிப்படையிலான மத்திய தூர ஏவுகணை உள்ளிட்ட தாக்குதல் ஆயுதங்களை அமெரிக்கா நிலைநிறுத்தி இப்பிரதேசத்தின் நிதானத்தைச் சீர்குலைக்க முயன்றுள்ளது என்றும் அவர் கூறினார்.