ஷிச்சின்பிங்கின் தூதாண்மை சிந்தனை தொடர்பான ஆய்வு கலந்துரையாடல் கூட்டம்

ஷிச்சின்பிங்கின் தூதாண்மை சிந்தனை தொடர்பான ஆய்வு கலந்துரையாடல் கூட்டம் டிசம்பர் 9ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, இக்கூட்டத்தில் பங்கெடுத்து உரைநிகழ்த்தினார். ஷிச்சின்பிங்கின் தூதாண்மை சிந்தனையின் தலைமையில், சீனத் தனிச்சிறப்பான வல்லரசின் புதிய தூதாண்மை நிலைமையைத் திறந்து வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், மனித குலத்தின் பொது எதிர்கால சமூகத்தை உருவாக்கி, சீனப் பாணியுடைய நவீனமயமாக்கத்துக்குச் சாதகமான சர்வதேச சூழலை உருவாக்கும் வகையில், புதிய யுகத்தின் தூதாண்மை பணிகளை, ஷிச்சின்பிங் நெடுநோக்கு தலைமையில், சீனத் தனிச்சிறப்புகளில் ஊன்றி நின்று மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author