கென்யா அரசுத் தலைவர் ரூட்டோவுடன் ஷி ச்சின்பிங் பேச்சுவார்த்தை

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள கென்யா அரசுத் தலைவர் வில்லியம் சமோய் ரூட்டோவுடன் ஏப்ரல் 24ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையின் போது, புதிய யுகத்திற்கேற்ப சீன-கென்யா இரு தரப்புறவை, பொது எதிர்காலச் சமூகமாக உயர்த்த இரு தரப்பினரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்.

ஷி ச்சின்பிங் கூறுகையில், கென்யாவுடன் இணைந்து, புதிய யுகத்தில் அனைத்து நிலைமைகளுக்கும் ஏற்ற சீன-ஆப்பிரிக்கப் பொது எதிர்காலச் சமூகத்தின் முன்மாதிரியை உருவாக்கி, சீன-ஆப்பிரிக்க உறவின் வளர்ச்சிக்கும், உலகின் தென் பகுதியின் ஒத்துழைப்புக்கும் வழிகாட்ட சீனா விரும்புவதாகத் தெரிவித்தார்.

இப்பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை, புதிய உயர் தொழில் நுட்பம், பண்பாட்டுப் பரிமாற்றம் உள்ளிட்ட 20 ஒத்துழைப்பு ஆவணங்களின் கையொப்ப நிகழ்வில் இரு நாட்டு அரசுத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

You May Also Like

More From Author