நடிகர் விமல் மற்றும் நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகி வரும், கிராமிய பின்னணி கொண்டத் திரைப்படமான ‘வடம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சசிக்குமார் வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்தின் கதை, பாரம்பரியமான ‘வடம் மஞ்சுவிரட்டு’ விளையாட்டை மையமாகக் கொண்டது ஆகும். ‘வடம்’ திரைப்படம் மண், மக்கள், மரியாதை மற்றும் வீரம் போன்ற ஆழமான உணர்வுகளைப் பேசும் ஒரு கதைக்களத்தைக் கொண்டுள்ளது.
குறிப்பாக, ஜல்லிக்கட்டைப் போலவேத் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான வடம் மஞ்சுவிரட்டைச் சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விமல் மற்றும் நட்டியுடன், பாலா சரவணன், சங்கீதா கல்யாண்குமார் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கெந்திரன் வி. இந்தப் படத்தை எழுதி இயக்க டி. இமான் இசையமைக்கிறார்.
வடம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
