சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் ஜூன் 24ஆம் நாள் ஷான்டோங் மாநிலத்தின் தேஜோ நகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், வேளாண்மை மற்றும் கிராமப்புறத்தின் நவீனமயமாக்கம், சீன பாணியுடைய நவீனமயமாக்கத்தின் ஒட்டுமொத்த நிலைமையுடனும் தரத்துடனும் தொடர்புடையது என்பதால், பல்வகை தொடர்புடைய பணிகளையும் செவ்வனே மேற்கொண்டு, வேளாண்துறையின் மொத்த உற்பத்தி திறன், தரம் மற்றும் பயனை அதிகரிக்க வேண்டும், உள்ளூர் நிலைமைகளுக்கு இணங்க, வாழவும் வேலை செய்யவும் ஏற்ற அழகான கிராமங்களின் கட்டுமானத்தை முன்னேற்றவும் வேண்டும் என்று வலியுறுத்தினார்.
24ஆம் நாள் முற்பகல் தேஜோ நகரின் டொங்யூஜியா கிராமத்தில், உள்ளூர் கோடைகால வேளாண் உற்பத்தி பற்றிய பணியறிக்கையை ஷிச்சின்பிங் கேட்டறிந்து, கோதுமை விளைச்சல், மக்காச்சோளம் நடவு, வேளாண் உற்பத்திக்கான பொருட்களின் வினியோகம் உள்ளிட்டவற்றை அறிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து தேசிய நாகரிக கிராமமான சியூஜியா கிராமத்துக்கு அவர் சென்றார். கிராமக் கட்சி அமைப்பின் கட்டுமானம், மக்களுக்கான அதன் சேவைகள், கிராமப்புற மறுமலர்ச்சியை மேம்படுத்தும் உள்ளூர் நடைமுறைகள் ஆகியவற்றை அவர் கேட்டறிந்தார்.
கிராமத்தை விட்டுப் புறப்பட்ட போது, உள்ளூர் மக்கள் கட்சியின் தலைமையில் சிறந்த வாழ்க்கையை மேற்கொள்ள ஷிச்சின்பிங் வாழ்த்து தெரிவித்தார்.
