ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசியல் கட்சிகள் கருத்தரங்கு 23ஆம் நாள் சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் தொடங்கியது. இவ்வமைப்பின் செயலாளர், ரஷிய நாடாளுமன்றக் கீழவையின் துணைத் தலைவர், உஸ்பெகிஸ்தான் சட்டமியற்றல் அவையின் துணைத் தலைவர்உள்ளிட்ட 20க்கும் மேலான நாடுகளின் சுமார் 60 கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்புகளின் தலைவர்களும், சீனாவுக்கான சில தூதர்களும் ஆகிய 200 விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இவ்வமைப்பினைச் சேர்ந்த உறுப்பு நாடுகளின் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து, உலக வளர்ச்சி முன்மொழிவுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு எனும் முன்மாதிரியை உருவாக்க சீனக் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது. உலகப் பாதுகாப்பு முன்மொழிவு மற்றும் உலக நாகரிக முன்மொழிவுக்கான முன்மாதிரியையும் கட்டியமைக்க சீனா விரும்புவதாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் சர்வதேச தொடர்புத் துறை அமைச்சர் லியூ ஜியான் சாவு தெரிவித்தார்.