சீன-கென்யா அரசுத் தலைவர்களின் மனைவிகள் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பெங்லியுவான் அம்மையார், சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்ட கென்யா அரசுத் தலைவர் ரூட்டோவின் மனைவி ரேச்சலுடன் தேநீர் சந்திப்பு நடத்தினார்.

அப்போது பெங்லியுவான் கூறுகையில், சீன-கென்ய நட்புறவு வாழையடி வாழையாக நிலவி வருகிறது. கல்வி, விளையாட்டு, வேளாண்மை முதலிய துறைகளில் இரு நாட்டின் ஒத்துழைப்பு சீராக உள்ளது. இரு தரப்பும், மனித தொடர்பை வலுப்படுத்தி, மக்களின் நட்பை அதிகரிக்க எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

வறுமை ஒழிப்பு பற்றிய சீனாவின் சாதனைகளை பெங்லியுவான் அறிமுகப்படுத்தினார். இதற்கிடையில், பயன் தரும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, வறுமை ஒழிப்பு, மகளிர் மற்றும் குழந்தை தொடர்பான இலட்சியத்தின் வளர்ச்சி ஆகியவற்றைக் கூட்டாக முன்னெடுப்பது குறித்து பெங்லியுவான் விருப்பம் தெரிவித்தார்.

படம்:XinHua News

You May Also Like

More From Author