குவாங்தொங்-மக்கெள ஆழ்நிலை ஒத்துழைப்பு மண்டலத்தைப் பார்வையிட்ட ஷிச்சின்பிங்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் டிசம்பர் 19ஆம் நாள் காலை ஹெங்ச்சின் பகுதியிலுள்ள குவாங்தொங்-மக்கெள ஆழ்நிலை ஒத்துழைப்பு மண்டலத்தைப் பார்வையிட்டார்.


ஷிச்சின்பிங் கூறுகையில் இந்த ஒத்துழைப்பு மண்டலம் நிறுவப்பட்டதன் 3 ஆண்டுகளுக்கு மேலாக, பல்வேறு பணிகள் ஆக்கப்பூர்வ முன்னேற்றம் அடைந்துள்ளன. ஹெங்ச்சின்-மக்கெள ஒருமைப்பாட்டு நிலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

ஹெங்ச்சினை வளர்த்து, இந்த ஒத்துழைப்பு மண்டலத்தைக் கட்டியமைப்பது தொடர்பான சீன மத்திய அரசின் கொள்கை சரியானது என்பது நடைமுறையின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


ஒத்துழைப்பு மண்டலத்தில் வசித்து, தொழில் புரியும் மக்கெள குடியிருப்பாளர்கள், ஒத்துழைப்பு மண்டலத்தின் திட்டமிடல், கட்டுமானம், மேலாண்மை மற்றும் சேவைகளில் பங்கேற்கும் பிரதிநிதிகள் ஆகியோருடன் ஷிச்சின்பிங் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்.


அவர் கூறுகையில் புதிய துவக்கப் புள்ளியில், சீர்திருத்தத்தை உறுதியுடன் செய்து, ஹெங்ச்சின்-மக்கெள ஒருமைப்பாட்டை மேலும் உயர் நிலைக்கு உயர்த்த வேண்டும். பொது சேவை மற்றும் சமூக உத்தரவாத அமைப்பு முறையை தொடர்ந்து மேம்படுத்தி, மக்கெள உடன்பிறப்புகள் இங்கே வாழ்ந்து, வேலை செய்து, தொழில் நடத்துவதற்கு வசதி அளிக்க வேண்டும் என்றும், முன்னேறிய வணிக சூழலை உருவாக்கி, மக்கெள பொருளாதாரத்தின் ஓரளவு பலதரப்பட்ட வளர்ச்சியையும், குவாங்தொங்-ஹாங்காங்-மக்கெள பெரிய வளைகுடா பகுதியின் சந்தை ஒருமைப்பாட்டையும் முன்னேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author