காலநிலை மற்றும் நியாயமான மாற்றம் குறித்த தலைவர்களின் காணொலி வழி மாநாட்டில் உரைநிகழ்த்திய போது சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த புதிய காலநிலைத் திட்டத்தை ஐ.நா தலைமை செயலாளர் குட்ரேஸ் வெகுவாகப் பாராட்டினார். உலகக் காலநிலை செயல்பாட்டிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்தது என்று மாநாட்டுக்குப் பின்பு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
பலதரப்புவாதத்தில் உறுதியாக ஊன்றி நிற்பது, சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, நியாயமான மாற்றத்தை முன்னேற்றுவது, பயனுள்ள நடவடிக்கையை வலுப்படுத்துவது முதலிய முக்கிய முன்மொழிவுகளை ஷிச்சின்பிங் முன்வைத்தார்.
மேலும், அனைத்துப் பொருளாதாரத் துறைகள் மற்றும் அனைத்து பசுமை இல்ல வாயுக்களையும் உள்ளடக்கிய தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்-2035 தொடர்பான (NDC) இலக்கை பெலெம் காலநிலை மாற்ற மாநாடு நடைபெறுவதற்கு முன்பாக வெளியிட உள்ளதாகவும் ஷிச்சின்பிங் கூறினார்.