சீனாவின் வறுமை ஒழிப்பு பற்றிய கருத்து கணிப்பு

Estimated read time 1 min read

2021ஆம் ஆண்டில் வறுமை ஒழிப்புத் திட்டத்தைச் சீனா அறிவித்து ஐந்தாண்டு மாற்றக் காலத்தை நிறுவியது.

இந்த ஐந்தாண்டு காலத்தில் சீனாவிலுள்ள அனைத்து 832 வறுமையிலிருந்து விடுபட்ட மாவட்டங்களிலும் முதன்மைத் தொழில்கள் வளர்க்கப்பட்டு வறுமை ஒழிப்புப் பணிக்கான அடிப்படை மேலும் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் வறுமை ஒழிப்புப் பணியின் வெற்றி உலகின் வறுமைக் குறைப்பு லட்சியத்துக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்று 93.5விழுக்காட்டினர் கருதுவதாக சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் நிறுவனம் உலக இணையப் பயனர்களிடம் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொருள் ரீதியான குறைப்பாட்டுப் பிரச்சினை மட்டுமல்லாமல், கண்ணோட்டம், வாழ்க்கை வழிமுறை, அடிமட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல துறைகளிலுள்ள முன்னேற்றங்கள் சீன வறுமை ஒழிப்புப் பணியின் வெற்றி மூலம் தீர்க்கப்பட்டுள்ளன என்று 89.5விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் சீனா ஊன்றி நிற்பது வறுமைக் குறைப்புக்கான அடிப்படை உந்து ஆற்றலாகும் என்று 92.9விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

 

You May Also Like

More From Author