மவுண்ட்பேட்டன் காலம் முதல் இந்தியாவை ஆட்சி செய்த பிரதமர்களில் மோடி சிறந்த சிறந்தவர் என நாடாளுமன்ற உறுப்பினர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
மவுண்ட்பேட்டன் காலம் முதல் இந்தியாவை ஆட்சி செய்த பிரதமர்கள் நாட்டிற்கு என்ன செய்துள்ளனர் என்றும் ஒரு பட்டியல் தயார் செய்தால் பிரதமர் மோடிக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் புரியும் என தெரிவித்தார்.
1988இல் நான் முதல் தடவை காசிக்கு சென்ற அது தூய்மையற்ற நகரமாக காட்சியளித்தது என்றும், ஆனால் கங்கை தற்போது புனிதமாக மாறியுள்ளதாகவும் கூறினார். சரியான திட்டமிடலுடன் இந்த பணிகளை செய்தவர் பிரதமர் மோடி என்றும் இன்னும் பணிகள் தொடர்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
உண்மையாக நாட்டை நேசிப்பவர்களால் மட்டுமே இதுபோன்ற பணிகளை செய்ய முடியும் என்றும் இளையராஜா கூறினார்.