200கோடி கிலோவாட் எட்டிய சீனாவின் படிமமல்லா எரியாற்றல் மின்சார உற்பத்தித் திறன்

சீன மின் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி, பிப்ரவரி மாதத்தின் இறுதி வரை, சீனாவின் படிமமல்லா எரியாற்றல் மின்சார உற்பத்தித் திறன் முதன்முறையாக 200கோடி கிலோவாட்டை எட்டியது. இது நாடளவிலான மொத்த அளவிலும் 58.8 விழுக்காட்டை வகிக்கிறது.

அவற்றில், காற்று மற்றும் சூரிய ஆற்றலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய எரியாற்றல் மின்சார உற்பத்தித் திறன் 146கோடி கிலோவாட்டை எட்டி மின்சார உற்பத்தி சாதனங்களின் மொத்த அளவிலும் 42.8 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது.

சீனாவின் மின்சார உற்பத்தித் தொழில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் பசுமையான வளர்ச்சி முறையின் மாற்றத்தை முன்னேற்றுவதில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்றுள்ளது.

You May Also Like

More From Author