தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கமானதை விட இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாக இருப்பதால், இன்னும் சில தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கட்கிழமை (செப்டம்பர் 16) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரப்பதமான காற்று மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக, மாநிலத்தில் ஒருசில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும் என அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் மேலும் தனது அறிக்கையில், வறண்ட வானிலை காரணமாக அடுத்த சில தினங்களுக்கு வெப்பநிலை தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.