தங்கத்தின் விலை அதிகமாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதற்காக நகைகளை வாங்குவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அட்சய திருதியை முன்னிட்டு கோவையில் உள்ள நகைக் கடைகளில் வியாபாரம் சூடுபிடித்தது. காலை 6 மணிக்கே கடைகளைத் திறந்த உரிமையாளர்கள், தங்க நகை விற்பனைக்குச் சலுகைகளையும் அறிவித்தனர்.
அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பதால், நகை வாங்க வந்திருப்பதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கூட்டம் குறைவாக இருப்பதால் வேண்டிய நகைகளைப் பொறுமையாகத் தேர்வு செய்ய முடிந்ததாகவும் கூறியுள்ளனர்.
தங்கத்தின் விலை அதிகமாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதற்காக நகைகளை வாங்குவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, வாடிக்கையாளர்களைக் கவரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளதாக நகைக்கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து வரும் நிலையில், தங்கத்தினை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.