டி20 உலகக்கோப்பை: நியூயார்க்கில் இந்திய அணிக்காக ஜிம் மெம்பர்ஷிப்பை வாங்கியுள்ளது பிசிசிஐ

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டி தொடரில் பங்கேற்றுள்ள அணிகளுக்கு தரப்பட்டுள்ள மோசமான பயிற்சி வசதிகள் மற்றும் நியூயார்க் ஆடுகளம் பற்றிய கடுமையான புகார்கள் எழுந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தங்கியிருக்கும் ஹோட்டல் ஜிம்மில் அதிருப்தி எழுந்ததாக கூறப்படுகிறது.

இதனால்,புதிய ஜிம் மெம்பர்ஷிப்பை வாங்குமாறு அணி சார்பாக பிசிசிஐக்கு அழுத்தம் தரப்பட்டது.
லாங் ஐலேண்டில் தங்கியுள்ள ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி, தங்கள் குழுவிற்கு ஹோட்டலில் செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் உடற்பயிற்சி கூடம் மோசமாக உள்ளது என தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, நியூயார்க் நகரில் உள்ள வீரர்களுக்கு ஜிம் உறுப்பினர் அட்டை பெருவர்தற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

You May Also Like

More From Author