சீனத் தலைமையமைச்சர் லீட்சியாங் நவம்பர் 17ஆம் நாள் பிற்பகல் மாஸ்கோவில் ரஷிய தலைமையமைச்சர் மிகைல் மிசூசுத்தினுடன் சந்திப்பு நடத்தினார்.
அப்போது லீட்சியாங் கூறுகையில், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் நெடுநோக்கு ரீதியான வழிக்காட்டலுடன், முதலீடு, எரியாற்றல், வேளாண்மை, பண்பாட்டு மற்றும் மக்களிடையிலான பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்க சீனா ரஷியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகின்றது என்று தெரிவித்தார். மேலும், இவ்வாண்டின் செப்டம்பர் திங்களில் சீனாவின் தியான்ஜின் மாநகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் நிறைய சாதனைகள் படைக்கப்பட்டன என்றும், இவ்வமைப்பின் பல்வேறு தரப்புகளும் ஷாங்காய் எழுச்சியைப் பின்பற்றி தலைவர்கள் வரைந்த வளர்ச்சி வரைபடத்தை விரைவில் நடைமுறையாக மாற்றுவதை முன்னேற்றுவதற்காக ரஷியாவுடனான ஒருங்கிணைப்பை நெருங்க சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மிகைல் மிசூசுத்தின் கூறுகையில், தற்போது ரஷியாவுக்கும் சீனாவுக்கும் இடையே புதிய கால விரிவான நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவு உயர்ந்த நிலையில் உள்ளது என்று தெரிவித்தார்.
