ஷிர்காவோவில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்! 

Estimated read time 0 min read

கோவாவின் ஷிர்காவோவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

வடக்கு கோவாவில் உள்ள ஸ்ரீ லைராய் தேவி கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஆறு பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில்,

கோவாவின் ஷிர்காவ் நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author