ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் எடுத்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் தேசவிரோத பிரச்சாரத்தை கண்காணிப்பதை முடுக்கிவிடவும், தவறான தகவல்கள் பரவுவதற்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்கவும் உள்துறை அமைச்சகம் (MHA) அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய எல்லை தாண்டிய தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தான் தலைமையிலான ஒருங்கிணைந்த தவறான தகவல் பிரச்சாரத்திற்கு பதிலளிக்கும் விதமாக வியாழக்கிழமை (மே 8) இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, சிந்தூர் நடவடிக்கை அல்லது இந்தியாவின் பாதுகாப்பு நிலை குறித்து போலி செய்திகளைப் பரப்பும் சமூக ஊடகக் கணக்குகளைக் கண்டறிந்து தடுக்குமாறு உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் தேச விரோத பதிவுகளை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
