ஹார்மோனியத்தின் ரகசியத்தை எடுத்துரைத்தார் இளையராஜா!

Estimated read time 0 min read

கோவையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா தனது ஹார்மோனியத்தின் ரகசியத்தை எடுத்துரைத்தார்.

கோவை தனியார் உணவக விடுதியில் நடைபெற்ற விழாவில் இசைஞானி இளையராஜாவுக்கு ரோட்டரி கிளப்பின் உயரிய விருதான , தொழில் சிறப்பு விருதை வழங்கினர்.

இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய இளையராஜா, தனது ஹார்மோனியம் கோவையில் பொன்னையா ஆசாரியிடம் செய்தது என்றும், இப்போதும் அந்த ஹார்மோனிய பெட்டியில் பழுது ஏற்பட்டால் கோவை பூ மார்கெட் பகுதியில் தான் சரி செய்வதாகக் கூறியுள்ளார்.

கோவையில் தான் செல்லாத இடம் இல்லை என்றும், தன்னுடைய ஹார்மோனியம் ஒலிக்காத இடம் இல்லை எனவும் குறிப்பிட்ட இளையராஜா, அதனால் தன்னையும் , கோவையையும் பிரிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

You May Also Like

More From Author