சீன-அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தை பற்றிய சீனாவின் நிலைப்பாடு

பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பற்றிய சீன-அமெரிக்க உயர்நிலை பேச்சுவார்த்தை குறித்து, அமெரிக்காவுக்கான சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் மே 8ஆம் நாள் முக்கிய மூன்று அம்சங்களை மீண்டும் வலியுறுத்தினார்.

முதலாவதாக, அண்மையில், அமெரிக்கா பல்வேறு வழிமுறைகளின் மூலம் சீனாவுக்கு தகவல்களை அனுப்பி, சுங்க வரி விதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.

இப்பேச்சுவார்த்தை அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க நடத்தப்படும். இரண்டாவதாக, அமெரிக்காவின் தவறான சுங்க வரி விதிப்பைச் சீனா உறுதியுடன் எதிர்க்கிறது.

இப்பிரச்சினையில் தனக்குரிய உரிமை நலன் மற்றும் சர்வதேச நியாயத்தையும், உலக வர்த்தக அமைச்சகத்தின் விதிமுறையையும், பலதரப்பு வர்த்தக அமைப்புமுறையையும் சீனா உறுதியுடன் பேணிக்காக்கும்.

மூன்றாவதாக, இந்தச் சுங்க வரி போர் அமெரிக்காவால் தொடக்கப்பட்டது. அமெரிக்கா கலந்தாய்வின் மூலம் பிரச்சினையைத் தீர்க்க விரும்பினால், அச்சுறுத்தலை நிறுத்தி, சமத்துவம், மதிப்பு, பரஸ்பர நலன் ஆகியவற்றின் அடிப்படையில் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author