சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெரும் தேசபக்திப் போரில் சோவியத் ஒன்றியம் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரஷ்யா சென்றுள்ளார்.
இந்நிலையில், ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் சீனர்கள் வெற்றி பெற்றமை மற்றும் பெரும் தேசபக்திப் போரில் சோவியத் ஒன்றியம் பெற்ற வெற்றி ஆகியவற்றின் 80ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூரும் வகையில் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் மே 7ஆம் நாள் சீன-ரஷிய மானிடப் பண்பாட்டியல் பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியானது சீன ஊடகக் குழுமம், ரஷிய தேசியத் தொலைக்காட்சி மற்றும் ஒளிபரப்பு நிறுவனம் ஆகிவற்றால் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வுக்காக சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் ரஷிய அரசுத் தலைவர் புதின் வழங்கிய வாழ்த்துச் செய்திகள் நிகழ்ச்சியில் படிக்கப்பட்டன.
பின்னர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென்ஹாய்சியொங் உரை நிகழ்த்தினார்.
இரு நாட்டுத் தலைவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, இரு நாட்டுச் செய்தி ஊடகங்கள் கையோடு கைகோர்த்து சீன-ரஷிய உறவின் வளர்ச்சிக்கும் மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்துக்கும் புதிய பங்களிப்பு ஆற்ற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
அரசியல், பொருளாதாரம், பண்பாடு, செய்தி ஊடகங்கள், கல்வி முதலிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த இரு நாடுகளின் 200க்கும் அதிகமான விருந்தினர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
