வசந்த விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிக்கான முன்னுரை, உலகளாவிய வசந்த விழா கலை நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு எனும் சிறப்பு நடவடிக்கை, பிப்ரவரி 6ஆம் நாள், பிரான்ஸின் மார்சேய் நகரில் நடைபெற்றது.
சீன ஊடகக் குழுமம், மார்சேய் நகருக்கான சீனத் துணை நிலை தூதரகம் ஆகியவை இந்நடவடிக்கையைக் கூட்டாக நடத்தின. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும் சீன ஊடக குழுமத்தின் தலைவருமான ஷென் ஹைய்சியோங்கும், பிரான்ஸுக்கான சீனத் தூதர் டெங்லீயும் காணொளி வழியில் உரை நிகழ்த்தினர்.
ஷென் ஹைய்சியோங் கூறுகையில், வசந்த விழா கொண்டாட்டத்துக்கான சீன ஊடகக் குழுமத்தின் கலை நிகழ்ச்சி 43 ஆண்டுகளாக நடத்தப்பட்டுள்ளது. இவ்வாண்டு, சீன ஊடகக் குழுமம், “5G+4K/8K+AI” என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, 85 மொழிகளின் மூலம், உலகளவில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான பண்பாட்டு நிகழ்ச்சியை வழங்கும் என்றார்.
