சீனாவில் புதிதாக அமைக்கப்பட்ட அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவில் புதிதாக அமைக்கப்பட்ட அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 870 ஆகும். இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 14.2 விழுக்காடு அதிகமாகும்.

ஆக்க தொழில் துறையில் பயன்படுத்தப்பட்ட அன்னிய முதலீட்டுத் தொகை 14 ஆயிரத்து 186 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 2.4 சதவீதப் புள்ளிகளை அதிகரித்துள்ளது.

இதில், உயர் தொழில் நுட்பத்துக்கான ஆக்க தொழில் துறையில் பயன்படுத்தப்பட்ட அன்னிய முதலீட்டுத் தொகை 6 ஆயிரத்து 375 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 2.4 சதவீதப் புள்ளிகளை அதிகரித்துள்ளது.

மேலும், ஜெர்மனி, சிங்கப்பூர் ஆகிய நாடுகள், சீனாவில் செய்துள்ள முதலீட்டுத் தொகை முறையே 18.1 மற்றும் 10.5 விழுக்காடு அதிகமாகும்.

You May Also Like

More From Author