இரு நாட்டு வளர்ச்சி மற்றும் சர்வதேச நியாயத்துக்கு சீன-ரஷியா பங்காற்றும்:ஷிச்சின்பிங்

Estimated read time 1 min read

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புத்தின், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஆகியோர் மே 8ம் நாள் காலை மாஸ்கோவில் சந்திப்பு நடத்தினர்.

அப்போது ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், கடந்த சில ஆண்டுகளில், இரு தரப்பின் கூட்டு முயற்சியுடன், சீன-ரஷிய உறவு நிலையாகவும் ஆரோக்கியமாகவும் உயர்தரமாகவும் வளர்ந்து வருகிறது.

நீண்டகால நட்பு அண்டை நாட்டுறவு, ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவது ஆகியவை, இரு நாட்டுறவின் தனிச்சிறப்பாகும் என்று தெரிவித்தார்.

தற்போது சீன பாணியுடைய நவீனமயமாக்கத்தின் மூலம், வல்லரசு கட்டுமானம் மற்றும் தேசத்தின் மறுமலர்ச்சியை சீனா முன்னேற்றி வருகிறது. பல்வகை ஆபத்து மற்றும் சவால்களைச் சமாளிக்கும் நம்பிக்கை சீனாவுக்கு உள்ளது.

ரஷியாவுடன் இணைந்து, தற்போதைய நிலைமைக்குச் சிறப்பு பொறுப்பேற்று, உலகின் பலதரப்பு வர்த்தக முறைமை, தொழில் சங்கிலி மற்றும் விநியோக சங்கிலியின் நிதானத்தைப் பேணிக்காத்து, இரு நாட்டு வளர்ச்சி மற்றும் சர்வதேச நியாயத்துக்கு மேலும் பங்காற்ற சீனா விரும்புகிறது என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்

You May Also Like

More From Author