சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சீனா வந்துள்ள கென்ய அரசுத் தலைவர் வில்லியம் சமோய் ருடோவுடன் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 3ஆம் நாள் காலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-கென்ய நட்பு வாழையடி வாழையாக நிலவி வருகின்றது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் ஒத்துழைப்பைச் சீனாவும் கென்யாவும் கூட்டாக மேற்கொண்டு, ஏராளமான முதன்மை திட்டங்களைக் கட்டியமைத்து, பிரதேசங்களின் பொருளாதார மற்றும் சமூகத்தின் வளர்ச்சியைப் பெரிதும் மேம்படுத்தி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயத்து வருகின்றன என்றார்.