மே 8ஆம் நாள் மத்தியம், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், ரஷிய அரசுத் தலைவர் விளடிமிர் புத்தினும் க்ரேம்லின் மாளிகையில் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தனர்.
அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில்,
சீன-ரஷிய உறவின் வளர்ச்சி போக்கையும், மனித சமூகத்தின் வளர்ச்சி போக்கையும் இரு நாடுகள் உறுதியாக கையாள வேண்டும். இரு நாடுகள் பன்முகங்களிலும் ஒத்துழைப்பு மேற்கொண்டு, இரு நாட்டு வளர்ச்சியை முன்னெடுப்பதற்கும் சர்வதேச நேர்மையைப் பேணிக்காப்பதற்கும் பங்காற்ற வேண்டும். சீனாவும் ரஷியாவும் நீண்டகால நட்புறவில் ஊன்றி நின்று, இரும்பு போன்ற உண்மையான நண்பர்களாக இருக்க வேண்டும். ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவதில் ஊன்றி நின்று, ஒன்றுக்கு ஒன்று துணை புரியும் கூட்டாளியாக இரு நாடுகள் இருக்க வேண்டும். நியாயத்தில் ஊன்றி நின்று, சர்வதேச ஒழுங்கைப் பேணிக்காக்க வேண்டும். உலக நிர்வாகத்திற்கு இரு நாடுகள் தலைமை தாங்க வேண்டும் என்றார்.