அதிரடியாக குறைந்த ஆபரண தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,440க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,360க்கு விற்பனையானது. வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,040க்கு விற்பனையானது. பின்னர் மாலையில் மீண்டும் தங்கம் விலை குறைந்தது. இதேபோல் நேற்று சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,120க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், மாலை மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது.

இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,440க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 8,805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் 109 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

You May Also Like

More From Author