திருவண்ணாமலை மகா தீபம் தரிசனத்திற்கான நுழைவுச்சீட்டு முற்றிலும் இலவசம்

Estimated read time 1 min read

திருவண்ணாமலை கோவில் இணை ஆணையர் பரணிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பரணி தீபம் மற்றும் மகாதீபம் தரிசனத்திற்கான ரூ.500 மற்றும் ரூ.600 மதிப்பிலான கட்டண நுழைவுச்சீட்டுகள் 1600 எண்ணிக்கையில் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டது.

இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் நலன் கருதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவுறுத்தலின்படி பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசனத்திற்கான நுழைவுச்சீட்டு முற்றிலும் இலவசமாக 3 ஆயிரம் எண்ணிக்கையில் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற 24-ந் தேதி அன்று நடைபெற உள்ள பரணி தீபம் தரிசனத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் பக்தர்களுக்கு 500 நுழைவுச்சீட்டுகளும், திரு வண்ணாமலை மாவட்டம் தவிர்த்து பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களுக்கு 500 நுழைவுச்சீட்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதே போல் மகா தீப தரிசனத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் பக்தர்க ளுக்கு 1000 நுழைவுச்சீட்டுகளும், திருவண்ணாமலை மாவட் டம் தவிர்த்து பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களுக்கு 1000 நுழைவுச் சீட்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நுழைவுச்சீட்டுகளை பெற விரும்பும் பக்தர்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி கோவிலின் அதிகாரப்பூர்வ இணையத http://annamalaiyar.hrce.tn.gov.in என்ற முகவரியில் இன்று (புதன்கிழமை) காலை 11 மணி முதல் வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணி வரையில் முற்றிலும் இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் 20-ந் தேதி அன்று மாலை 4 மணியளவில் இணையதளம் வழியாக முன்பதிவு செய்த பக்தர்களில் கணினி மூலம் தானியங்கி குழுக்கள் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படும் பக்தர்களுக்கு மின்னணு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்புடன் கூடிய குறுஞ்செய்தி அவர்கள் முன்பதிவின் போது அளித்த செல்போன் எண்ணிற்கு தகவல் அனுப்பி வைக்கப்படும்.

தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் தங்களுக்கான மின்னணு நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து வருகிற 24-ந் தேதி அன்று அருணாசலேஸ்வரர் கோவிலின் நுழைவு வாயிலில் அதனை காண்பித்து ஸ்கேன் செய்த பின்னர் கார்த்திகை தீப தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஆதார் அடடையை அடையாளச் சான்றாக கொண்டு சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.

பரணி தீபத்திற்கு பதிவு செய்பவரால் மகா தீபத்திற்கு பதிவு செய்ய இயலாது. மகா தீபத்திற்கு பதிவு செய்பவரால் பரணி தீபத்திற்கு பதிவு செய்ய இயலாது. பரணி தீபத்திற்கான முன்பதிவு செய்பவர்கள் ஒரு சீட்டு மட் டுமே பதிவு செய்ய இயலும். மகா தீபத்திற்கு பதிவு செய்பவர்கள் வெவ்வேறு ஆதார் எண்களை கொண்டு 2 பதிவுகளை மேற்கொள்ளலாம். மேற்படி நுழைவு சீட்டுகள் அனைத்தும் கணினி மூலம் தானியங்கிக் குழுக்கள் முறையில் மட்டுமே வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author