திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு..!

Estimated read time 1 min read

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், ஒருமையிலும் பேசியதாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூரில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதுதொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தவெக நிர்வாகிகள், ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், அவதூறு பரப்பியது, பொது இடத்தில் கலவரம் ஏற்படுத்துவது, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவது ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author