அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; மக்களுக்கு சுகாதார ஆலோசனையை வெளியிட்டது மத்திய அரசு  

Estimated read time 0 min read

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
அதில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் பீதியைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய பரவலில் ஏற்படும் பாதிப்புகள் பெரும்பாலானவை லேசானவை என்றும், வீட்டு தனிமைப்படுத்தலின் மூலமே சரிசெய்யப்பட்டுவிட முடியும் என்றும் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது பரவும் மாறுபாடுகளின் தீவிரம் அல்லது பரவும் தன்மை அதிகரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
இந்த பரவலில் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகியவை அதிக எண்ணிக்கையிலான பாதிப்புக்களிக் கொண்டுள்ள மாநிலங்களாக உள்ளன.

You May Also Like

More From Author