நிரம்பியது மேட்டுப்பாளையம் பில்லூர் அணை – பாதுகாப்பு கருதி உபரீநீர் வெளியேற்றம்!

Estimated read time 0 min read

தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியதால் அணையிலிருந்து பாதுகாப்பு கருதி உபரீநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியதால் பாதுகாப்பு கருதி 16 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பவானி ஆற்றில் மக்கள் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

You May Also Like

More From Author