சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு பரபரப்பான தருணம் ஏற்பட்டது.
துபாயிலிருந்து 326 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது திடீரென பச்சை நிற லேசர் ஒளி தாக்கியதால் விமானம் தரையிறங்கும் தருணத்தில் பதற்றம் நிலவியது.
விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை மீண்டும் உயரத்தில் பறக்கவைத்து, கட்டுப்பாட்டறையுடன் தொடர்பு கொண்டு நிலையை சீர்செய்தார்.
பின்னர் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. 326 பயணிகளும் பத்திரமாக விமான நிலையத்தை எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எமிரேட்ஸ் விமானம் மீது விழுந்த லேசர் வெளிச்சம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
