பாங்காக் காவல்துறை ஒரு காவல் நிலையத்தில் பல அதிகாரிகளை சொறிந்து கடித்ததால், ஒரு பூனையை கைது செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
தாய் மொழியில் பணத்தை எண்ணுதல் என்று பொருள்படும் நப் டாங் என்று பெயரிடப்பட்ட அமெரிக்க ஷார்ட்ஹேர் பூனை கடந்த மே 9 அன்று ஆதரவு இல்லாமல் சுற்றிக்கொண்டு இருந்த நிலையில், ஒருவர் அதை மீட்டு உரிமையாளரைக் கண்டுபிடித்து ஒப்படைப்பதற்காக காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் இந்த பூனை குறித்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட அதிகாரி டா பரிந்தா பக்கீசுக், காவல்துறையினர் பூனையை அன்புடன் வரவேற்று உணவு மற்றும் பொம்மைகளை வழங்கியதாக விளக்கினார்.
இருப்பினும், நன்றியுணர்விற்குப் பதிலாக, பூனை காவலர்களை கடித்தும், பிராண்டியும் வைத்தது.
பூனையைக் கைது செய்து அதிரடி காட்டிய காவல்துறை; வைரலாகும் பதிவின் சுவாரஸ்ய பின்னணி
