மேஷம் :
இராசி 8 க்கு உடைய செவ்வாய் பஞ்சமஸ்தானத்தில் நட்பு நிலையில் சஞ்சரிப்பதால் எந்த காரியத்தையும் தைரியமாகவும் திடமான மனநிலையுடன் செயல்படுவீர்கள். எதிலும் நிதானம் தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது பொருமையாக செல்லவேண்டும்.
குழந்தைகளால் சிறு சிறு சஞ்சலங்கள் ஏற்படலாம்.
இராசியில் சுக்ரன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் மேன்மையும் சிந்தனை செயலிலும் கலைநயத்தோடு ஈடுபடுவீர்கள்.
இராசிக்கு மூன்றாம் இடத்தில் உள்ள குரு அஸ்தங்கம் நிலையிலே நீடிப்பதால் புதிய முயற்சிகள் தாமதப்படலாம், நண்பர்கள் இளைய சகோதர சகோதிரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். புதிய கடன் வாங்குவதில் தாமதம் ஏற்படலாம், உத்தியோகத்தில் வேலை பளு அதிகம் காணப்படலாம்.
வார மத்தியில் பண விரையங்கள் இருந்தாலும் வார இறுதியில் தன வரவு நன்றாக இருக்கும். வார இறுதியில் சந்திரன் ஆட்சி பெருவதால் தாய் வழி ஆதரவு, மற்றும் மாணவர்களுக்கு சாதகமாக அமையும். வார இறுதியில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும்.
அனுகூலமான நாட்கள், 22,25,26,
ரிஷபம் :
இராசிநாதன் சுக்ரன் இராசிக்கு 12 ல் சஞ்சரிப்பதால் சுப விரையங்கள் ஏற்படலாம், ஆரோக்கியத்தில் மேன்மை ஏற்படும், பெண்களால் ஆதாயம் ஏற்படலாம். . இராசிக்கு 2ல் குரு அஸ்தங்கம் ஆகியிருப்பதால் தனவரவில் சற்று பின்னடைவு ஏற்படலாம்.
வெளிநாடு முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு சற்று தாமதங்கள் ஏற்படலாம். தாயாருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
இராசிக்கு 3, 5ம் அதிபதி புதன் கடகத்தில் பகை பெற்று இருப்பதால் பண வரவு வியாபாரத்தில் இலாபம் குறைந்து காணப்படலாம், குழந்தைகளால் சிறு சிறு சஞ்சலங்கள் ஏற்படலாம்.
தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் இருந்தாலும் இலாபம் சற்று குறைவுடன் காணப்படும்.
குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்லுதல் நல்லது. புதிய முயற்சிகள் சற்று தாமதப்படலாம்்ஆயினும் வார இறுதியில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். பண வரவு வார இறுதியில் சீராகும்.
அனுகூலமான நாட்கள் – 27,28
மிதுனம் :
இராசி நாதன் புதன் கடகத்தில் பகை வீட்டில் சஞ்சரிப்பதால் சற்று தைரியம் குறைவுடன் காணப்படுவீர்கள். முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படலாம்.
வண்டி வீடு சம்பந்தமான விஷயத்தில் செலவுகள் ஏற்படலாம். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. .
கணவர் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. திருமண முயற்சிகள் தாமதப்படலாம். கூட்டுத்தொழிலில் சிக்கல்கள் ஏற்படலாம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
தொழில் சற்று மந்தமாக காணப்படலாம். பயணங்கள் ஏற்படலாம், பயணங்கள் நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
வார ஆரம்பத்தில் செலவுகள் அதிகமாக காணப்படலாம். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளால் மேன்மை ஏற்படும்.
அனுகூலமான நாட்கள் 22,25,26
கடகம் :
இராசி நாதன் சந்திரன் இந்த வாரம் அமாவாசை நோக்கி செல்வதால் சிந்தனையில் சற்று குழப்பங்கள் ஏற்படலாம். தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவீர்கள், இருப்பினும். வார இறுதியில் ஆட்சி நிலைக்கு வருவதால் வாரத்தின் பிற்பகுதி நன்மை பயக்கும்.
தனாதிபதி சூரியன் 12ல் மறைவதால் வியாபாரத்தில் இலாபம் / பண வரவில் சற்று பின்னடைவு இருக்கும்
இராசிக்கு 6,9 ம் அதிபதி குரு அஸ்தங்கம் ஆவதால் தந்தையிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம், தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, புதிய கட்ட்கள் வாங்குவதில் தடை ஏற்படலாம்.
தொழிலில் நல்ல மேன்மை ஏற்படலாம். சுய முயற்சிகளால் இலாபம் மேம்படும், பண வரவு நன்றாக இருக்கும். வார இறுதியில் செலவுகள் காணப்படலாம்.
அனுகூலமான நாட்கள் 22,23,24,27,28.
சிம்மம் :
இராசிக்கு 11 ல் குரு அஸ்தங்கம் நிலையில் நீடிப்பதால், வியாபாரத்தில் இலாபம் சற்று குறைந்து காணப்படலாம், எனினும் சுக்ரன் பாக்கியஸ்தானத்தில் இருப்பதால் தொழில் ரீதியான நன்மைகள் இலாபம் மேம்படும்.
இராசிக்கு 2,11 அதிபதி புதன் 12 ல் மறுந்து பகை பெற்றதால் பண வரவில் சிரம்ம் ஏற்படலாம். பண விரையங்கள் ஏற்படலாம்.
தந்தை ஙழி ஆதரவு மேம்படும். தந்தையின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
குழந்தைகளால் சிறு சிறு மன சஞ்சலங்கள் ஏற்படலாம்.
மூத்த சகோதரங்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
வார ஆரம்பம் மற்றும் இடையில் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள், வியாபாரம் நன்றாக இருக்கும். வார இறுதியில் பண விரையங்கள் ஏற்படலாம், வார இறுதியில் பயணங்கள் ஏற்படலாம் அதனால் சற்று உடல் அசதி ஏற்படலாம்.
அனுகூலமான நாட்கள் 23,24,25,26
கன்னி :
இராசிக்கு 10ம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் தொழிலில் நல்ல மேன்மை ஏற்படும் இலாபஸ்தானத்தில் புதன் பகை பெற்று சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் சில இடையூர்கள் ஏற்படலாம், இலாபம் குறைந்து காணப்படலாம்.
வண்டி வீடு சம்பந்தமான செலவுகள் ஏற்படலாம், மாணவர்கள் சற்று கவனத்துடன் செயல்படவேண்டும்.
தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயாருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
தந்தை மற்றும் குடும்பத்தில் ஒரு சிலரால் மன சஞ்சலங்கள் அவமானங்கள் ஏற்படலாம், வெளியூர் வெளிநாடு வெளிமாநில பயணங்கள் சாதகமாக இலாபகரமாக அமையும். தனாதிபதி மற்றும் பாப்கியாதிபதி சுக்ரன் 8 ல் மறைவதால் பண வரவில் பின்னடைவு ஏற்படலாம், காரியத்தில் தடை தாமதம் ஏற்படலாம்.
கணவர் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது, கூட்டுத்தொழிலில் கவனம் தேவை. வாரத்தின் பிற்பகுதி நல்லபடியாக இருக்கும்.
வாரத்தின் முதல் நான்கு நாடகள் சற்று சாதகமாக இல்லை, அலைச்சல் மனதில் சஞ்சலங்கள், முடிவெடுப்பதில் சிரம்ம் ஏற்படலாம், வார இறுதியில் இலாபாதிபதி சந்திரன் ஆட்சி பெருவதால் பண வரவு தன்னம்பிக்கை தொழிலில் மேன்மை ஏற்படலாம்.
அனுகூலமான நாட்கள் 25,26,27,28
துலாம் :
இராசி நாதன் சுக்ரன் இராசியை பார்ப்பதால் நல்ல மன தைரியத்துடனும் தெளிந்த சிந்தனைகளுடனும் செயலில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
தந்தை வழி ஆதரவு பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பயணங்கள் இலாபகரமாக அமையும்.
கணவர் மனைவி உறவு மேன்மையாக இருக்கும்., தன வரவு நன்றாக இருக்கும். திருமண முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். கூட்டுத்தொழிலில் மேன்மை ஏற்பட்டு இலாபம் மேம்படும்.
பாக்கியாதிபதி மற்றும் விரையீதுபதி புதன் கடகத்தில் சஞ்சரிப்பதால், காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம். பயணங்களால் அசதி தூக்கம் கெடுதல் போன்றவை நிகழலாம்.
பழைய கடன்கள் அடைவதற்கு சற்று தாமதம் ஏற்படலாம். இளைய சகோதரங்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வாரத்தின் முற்பகுதியில் பயணங்களால் அசதி ஏற்படலாம், மன சஞ்சலங்கள் முடிவு எடுப்பதில் குழப்பம், காரியத் தடை ஏற்படலாம்.
வாரத்தின் பிற்பகுதி ஆரோக்கியத்தில் முன்னேற்றமும் பண வரவும் மேம்படும்.
அனுகூலமான நாட்கள் 22,28,28
விருச்சிகம் :
இராசிநாதன் செவ்வாய் சிம்மத்தில் சஞ்சரிப்பதால் இந்த வாரம் தன்னம்பிக்கை அதிகமாகவும் தைரியத்துடனும் நல்ல தெளிந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியம சீராக இருக்கும்.
இலாபாதிபதி புதன் கடகத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் இலாபம் குறைந்து காணப்படலாம்.
தனாதிபதி மற்றும் பஞ்சமாதிபதி குரு அஸ்தங்பம் நிலையில் நீடிப்பதால் தன. ரஙில் பின்னடைவு இருக்கும் குழந்தைகளால் மன கஷ்டம் ஏற்படலாம்.
குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தன வரவு சற்று குறைவாக காணப்படும், முயற்சிகள் சற்று தாமதப்படலாம். வாக்கில் கவனம் தேவை.
வார ஆரம்பத்தில் பெண்களால் ஆதரவு மற்றும் புதிய நண்பர்கள் அறிமுகம் ஆகலாம். .
வாரத்தின் பிற்பகுதியில் காரியத்தில் தடை தாமதம், பயணங்களால் அலைச்சல், மன சஞ்சலங்கள் முடிவெடுப்பதில் குழப்பங்கள் காணப்படலாம்.
வாரத்தின் பிற்பகுதியில் செலவுகளும் அதிகமாக காணப்படும்.
அனுகூலமான நாட்கள் 22,23,24,
தனுசு :
இராசி நாதன் குரு பகவான் இராசிக்கு 7 ம் இடத்தில் அஸ்தங்க நிலையிலேயே இருப்பதால், குடும்பத்தில் கணவர் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்லுதல் நல்லது.
தன்னம்பிக்கை மற்றும் தைரியம் சற்று குறைந்து காணப்படலாம், மன குழப்பங்கள் ஏற்படலாம்.
தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி வீடு சம்பந்தமான செலவுகள் ஏற்படலாம்.
இராசிக்கு 7ம் அதிபதி புதன் கடகத்தில் சஞ்சரிப்பதால், குடும்பத்தில் கணவர் மனைவி இடையே விடலடுக் கொடுத்து செல்லுதல் நன்மையை பயக்கும், தொழிலில் சற்று மந்தமாக காணப்படலாம்.
குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படலாம். குழந்தைகளால் இலாபம் ஏற்படலாம்.
திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம்..
வாரத்தின் முதல் 4 நாட்கள் வியாபாரம் உத்தியோகம் இலாபகரமாக அமையும். தன வரவும் நன்றாக இருக்கும்.
வார இறுதியில் பயணங்களால் அசதி ஏற்படலாம். மன சஞ்சலங்கள், முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்படலாம்.
அனுகூலமான நாட்கள் – 23,24,26,26
மகரம் :
இராசிக்கு 12 மற்றும் 3 ம் அதிபதி குரு அஸ்தங்கம் நிலையிலேயே இருப்பதால் முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம், தூக்கம் கெடலாம்.
நேரத்திற்கு உணவு அருநரத முடியாமல் போகலாம். இளைய சகோதர சகோதிரியுடன் பருத்து வேறுபாடு ஏற்படலாம்.
வண்டி வீடு நிலம் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் மேன்மை இருக்கும்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் இலாபம், உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும்.
பாக்கியாதிபதி புதன் கடகத்தில் சஞ்சரிப்பதால் முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படலாம்.
வார ஆரம்பத்தில் செலவுகள் சற்று அதிகமாக காணப்படும், வார இறுதி நாட்கள் தன வரவு மற்றும் காரிய சித்தி ஏற்படலாம்.
அனுகூலமான நாட்கள் – 25,26,27,28.
கும்பம் :
இராசிக்கு தனாதிபதி மற்றும் இலாபாதிபதி குரு அஸ்தங்கம் நிலையிலேயே இருப்பதால் தன வரவு குறைந்து காணப்படும்.
தொழிலில் இலாபம் குறைந்து காணப்படலாம்.
மூத்த சகோதரங்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்
எந்த காரியத்திலும் இந்த வாரம் அவசரமாக செயல் படுவீர்கள், நிதானம் தேவை. .
குடும்பத்தில் கணவர் மனைவி விட்டுக்கொடுத்து செல்லுதல் நல்லது.
பேச்சில் கவனம் நிதானம் தேவை, தேவையற்ற வார்த்தைகளை குறைத்துக் கொள்ளவும்.
தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
வண்டி வீடு சம்பந்தமான செலவுகள் ஏற்படலாம். வார ஆரம்பத்தில் செலவுகள் அதிகமாக காணப்படும்.
வார இறுதியில் பண வரவு சீராகும்.
அனுகூலமான நாட்கள் – 22,27,28
மீனம் :
இராசிநாதன் மற்றும் 10 ம் அதிபதி குரு அஸ்தங்கம் நிலையிலேயே இருப்பதால் மன அமைதியற்று சிந்தனை தெளிவற்று காணப்படலாம்.
ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் இலாபம் கம்மியாக காணப்படும். இளைய சகோதர சபோதிரி மூலமாக பண வரவு ஆதரவு ஏற்படலாம். எதிர் பாராத பண வரவுகளும் ஏற்படலாம்.
இராசியில் சனி சஞ்சரிப்பதால் மன அழுத்தம் வேதனை ஏற்படலாம்.
தனாதிபதி மற்றும் பாக்கியாதிபதி செவ்வாய் சிம்மத்தில் இருப்பதால் நீண்ட நாட்களாக தடைப்பட்ட விஷயங்கள் நடைபெற வாய்ப்புக்கள் உள்ளன.
வார முதலிலும் இறுதியிலும் செலவுகள் சற்று அதிகமாக காணப்படலாம்.. குடும்பத்தில் கணவர் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லுதல் நல்லது.
நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
அனுபூலமான நாட்கள் : 24,25
சுபம் !!!
தென்னேட்டி சுப்பராமன் ஶ்ரீராம்
9566620842 / 9944443215
astromanibharathy@gmail.com