சமீபத்திய எல்லை தாண்டிய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்கா ஒரு தீர்க்கமான பங்கை வகித்தது என்ற கூற்றுகளை நிராகரித்து, பாகிஸ்தானை போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்ததற்காக இந்திய ஆயுதப் படைகளை வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் பாராட்டியுள்ளார்.
ஜெர்மன் நாளிதழான ஃபிராங்க்ஃபர்ட்டர் ஆல்ஜெமைன் ஜெய்துங்கிற்கு அளித்த பேட்டியில், டாக்டர் ஜெய்சங்கர், இந்திய ராணுவ நடவடிக்கைதான் பாகிஸ்தானை தாக்குதலை நிறுத்தத் தயாராக இருக்கிறோம் என்று சொல்ல வைத்தது என்று கூறினார்.
ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா மே 7 அன்று பதிலடி கொடுத்த நிலையில், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தது.
ஆனால், அதை முறியடித்து, பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் வலுவான பதிலடிகளைக் கொடுத்தது.
சண்டை நிறுத்தத்திற்கு இந்திய ராணுவத்திற்குதான் நன்றி சொல்லணும்: ஜெய்சங்கர்
