மேற்கு திசையில் காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த மழை வரும் 8ம் தேதி வரை தொடரக்கூடும் என IMD கூறியுள்ளது.
எனினும் தமிழகத்தின் சில இடங்களில் இன்று மற்றும் நாளை, இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதன் விளைவாக, வெப்பமும் காற்றில் ஈரப்பதமும் அதிகரித்து, வெளியில் செல்லும் மக்க்கள் கவனத்துடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு
