தமிழக அரசின் புதிய பில்டிங் ரூல்ஸ் வெளியீடு!!

Estimated read time 0 min read

தமிழகத்தில் புதிய கட்டிட விதிகளில் பல்வேறு மாற்றங்களைச் செய்து, அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த புதிய அரசாணையின்படி, கட்டிடங்களின் உயரம், வணிகப் பயன்பாட்டுக்கான அனுமதி மற்றும் வாகன நிறுத்துமிடம் தொடர்பாகப் பல்வேறு முக்கியத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

குறிப்பாக, கட்டிடங்களின் உயர வரம்பு இதுவரை 18.30 மீட்டராக இருந்த நிலையில், தற்போது அது 19.50 மீட்டராக உயர்த்தப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வணிக பயன்பாட்டைப் பொறுத்தவரை, சென்னையில் 12 மீட்டர் அகலமுள்ள சாலையை ஒட்டிய பகுதிகளிலும், சென்னைக்கு வெளியே பிற பகுதிகளில் 9 மீட்டர் அகலமுள்ள சாலையை ஒட்டிய பகுதிகளிலும் வணிக அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, ஐடி நிறுவனங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு 75 சதுர மீட்டர் பரப்பளவிற்கும் குறைந்தபட்சம் ஒரு கார் பார்க்கிங் வசதி அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author