இபிஎஸ்ஸுக்கு செக் வச்ச காமராஜ்!! 

Estimated read time 1 min read

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வருகைக்குப் பிறகு பல்வேறு முக்கியக் கட்சிகளிலிருந்தும் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தவெக-வை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் பலர் ஏற்கனவே தவெக-வில் இணைந்துள்ள நிலையில், தற்போது அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான காமராஜ் அவர்களும் தவெக-வில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ளத் தகவல் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) மீதான தொடர் அதிருப்தி காரணமாகவே மூத்த நிர்வாகிகள் அதிமுகவை விட்டு வெளியேறி வருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இபிஎஸ் மீதான அதிருப்தியால் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது அடுத்தகட்ட அரசியல் முடிவுகளை எடுத்துள்ள நிலையில், அவர்களைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் காமராஜும் இதே முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக (எம்.எல்.ஏ) இருந்து வரும் காமராஜ், டெல்டா மாவட்டங்களின் அதிமுக முக்கிய முகமாகவும் பலமான தூணாகவும் விளங்கி வருகிறார். டெல்டா மண்டலத்தில் செல்வாக்குமிக்க ஒரு மூத்த தலைவரின் இந்தத் திடீர் அரசியல் நகர்வு அதிமுக வட்டாரத்திற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படும் அதே வேளையில், தவெக தரப்பிற்குப் பலம் சேர்க்கும் வகையில் அமைந்து பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author