குற்றமிழைப்பதை இஸ்ரேல் உடனே நிறுத்த வேண்டும்:ஐ.நா

கிழக்கு ஜெருசலேம் உட்பட கைப்பற்றப்பட்ட பாலஸ்தீன பிரதேசம் மற்றும் இஸ்ரேல் பிரச்சினைக்கான ஐ.நாவின் தனி சர்வதேசப் புலனாய்வு ஆணையம் 26ம் நாள் வெளியிட்ட ஓர் அறிக்கையில், கைப்பற்றப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் இஸ்ரேல் போர் குற்றம் மற்றும் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் குற்றம் இழைத்துள்ளது என்றும், காசா பகுதியில் இன ஒழிப்பு நடவடிக்கையை இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தது.

சர்வதேச நீதிமன்றம் 2024ம் ஆண்டின் ஜுலை திங்களில் வழங்கிய ஆலோசனைகளை இஸ்ரேல் பின்பற்றி, பாலஸ்தீனப் பிரதேசத்தை சட்டவிரோதமாக கைப்பற்றும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி, அனைத்து குடியிருப்பிடங்களை அகற்றி, குடியிருப்புவாசிகளை வெளியேற்ற வேண்டும். அதே வேளையில், கைப்பற்றியுள்ள சொத்துகளையும் நிலங்களையும் பாலஸ்தீன உரிமையாளர்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று இப்புலனாய்வு ஆணையம் முன்மொழிவுகளைத் தெரிவித்தது.

Please follow and like us:

You May Also Like

More From Author