பாகுபலி, RRR போன்ற பிரமாண்ட படங்களை எடுத்தவர் இயக்குனர் S.S ராஜமௌலி.
இவரது அடுத்த படைப்பாக வரவிருக்கும் பிரம்மாண்ட திரைப்படமான ‘வாரணாசி’ படத்தை தயாரிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ள மொத்த பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகி, திரையுலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இணையத்தில் வெளியான செய்தியின்படி இப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களின் ஊதியம் உட்பட, ‘வாரணாசி’ திரைப்படத்தின் மொத்த தயாரிப்பு செலவு சுமார் ரூ.1200 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியத் திரைப்பட வரலாற்றில் மிக உயர்ந்த பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இது அவரது முந்தையப் படைப்புகளான ‘பாகுபலி’ மற்றும் ‘RRR’ திரைப்படங்களை விடவும் மிக பெரிய பட்ஜெட் என Gulte செய்தி தெரிவிக்கிறது.
ராஜமௌலி- மகேஷ் பாபு படத்தின் பட்ஜெட் ரூ. 1200 கோடியா?
