தலைமை செயலாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Estimated read time 0 min read

2023ஆம் ஆண்டு முதல் தற்போது வரை உள்ள தலைமை செயலாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு துறைகளில் பணியாற்றிவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவது குறித்து குழு அமைக்க கடந்த 2023ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

2 ஆண்டுகள் ஆகியும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத நிலையில், கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரிய வழக்கு, நீதிபதி பட்டு தேவானந்த் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிமன்றத்தை அணுகும் சாமானியர்கள் மற்றும் ஏழை மக்கள் மீது அதிகாரிகளுக்கு எந்த அக்கறையும் இல்லையென்று அதிருப்தி தெரிவித்த நீதிபதி,

தலைமைச் செயலாளரே உத்தரவுகளை அமல்படுத்த தவறினால், அதிகாரிகள் எப்படி அமல்படுத்துவார்கள் எனவும் வேதனை தெரிவித்தார்.

இதையடுத்து, 2023 முதல் தற்போது வரை உள்ள தலைமை செயலாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிய நீதிபதி உத்தரவிட்டார். .

You May Also Like

More From Author