வங்கக்கடலில் வரும் 15ம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக, வரும் 15ம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலின் குறிப்பிட்ட சில பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீச வாய்ப்புள்ளதால், வரும் 16ம் தேதி வரை அப்பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
