பீகார் அசோக் தாம் கோயிலில் பயங்கர நெரிசல்: மின் கம்பி விழுந்ததாக வதந்தி பரவியதில் 7 பக்தர்கள் பலி  

Estimated read time 1 min read

பீகார் மாநிலத்தில் உள்ள அசோக் தாம் கோயிலில், இன்று காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
காலை 6.45 மணியளவில் திடீரென ஏற்பட்ட முண்டியடித்தலில் 7 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்; 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
கோயில் வளாகத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்த நிலையில், அங்கிருந்த மின் கம்பம் ஒன்று திடீரெனச் சரிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
மின்சாரம் தாக்கிவிடும் என்ற பயத்தில் வதந்திகள் பரவியதால், அலறியடித்துக்கொண்டு வெவ்வேறு திசைகளில் ஓடத் தொடங்கினர்.
அதே நேரத்தில், கோயிலின் அருகிலுள்ள ரயில் நிலையத்தில் இரு ரயில்கள் அடுத்தடுத்து வந்ததால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்தது.
இதனால் ஏற்பட்ட கடுமையான அழுத்தத்தில் மூங்கில் தடுப்புகள் உடைந்ததில், பக்தர்கள் ஒருவரையொருவர் மிதித்துக்கொண்டு கீழே விழுந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author