NTA கடந்த ஜூன் 22 முதல் 30 வரை நடத்திய UGC-NET 2026 தேர்வில் ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்களில் பல்வேறு தவறுகள் நிலவியதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, அப்பாடங்களுக்கான தேர்வுகளை முழுமையாக மீண்டும் நடத்த உத்தரவிட்டுள்ளது.
ஆரம்பத்தில் இத்தகைய பிழைகள் இயல்பானவை என அலட்சியப்படுத்தப்பட்ட போதிலும், வினாத்தாள்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானதால் இக்கடின முடிவை NTA எடுத்துள்ளது.
UGC-NET வினாத்தாள்களில் அறிஞர்களின் பெயர்கள் தவறாக அச்சிடப்பட்டது, புத்தக தலைப்புகளில் பிழைகள், இலக்கண மற்றும் நிறுத்தற்குறி தவறுகள் மற்றும் மொழிபெயர்ப்பு சிக்கல்கள் அதிக அளவில் இடம்பெற்றிருந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், முந்தைய ஆண்டுகளின் வினாக்கள் பெருமளவில் மீண்டும் கேட்கப்பட்டதும் சர்ச்சையைக் கூட்டியது.
UGC NET தேர்வை ரத்து செய்து மறுதேர்வு அறிவித்த NTA: கொந்தளிப்பில் மாணவர்கள்
